Labels

பயனுள்ள மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கு




இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.
காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட இலவசமாக கிடைக்கப் பெறும் மென்பொருட்களில் உள்ளது.
Google Chrome 16: இணைய உலாவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும்.
இந்த உலாவியின் எளிமையான தோற்றமும் வேகமான செயல் திறனாலும் அனைவரும் இந்த உலாவியை விரும்பி பயன்படுத்துகின்றனர். இப்பொழுது உள்ள உலாவிகளில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ள ஒரே உலாவி இது தான்.
மற்ற உலாவிகள் இதன் வருகையால் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த மென்பொருள் கூகுளில் தயாரிப்பு என்பது இதன் கூடுதல் பலமாகும். தற்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை chrome 16 வெளியிட்டு உள்ளனர்.
Firefox 9: உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலாவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது).
கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாக திகழ்கிறது.

உங்களது பேஸ்புக் பக்கத்தை பார்க்கும் நபர்களின் விவரங்களை அறிவதற்கு

ஹூ ஈஸ் லைவ் என்ற இணையதளம் நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிற‌து.
ஒரு சில வலைப்பதிவுகளில் எத்த‌னை பேர் ஓன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுவதை பார்க்க முடியும்.
ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான். அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவதற்கான் வாய்ப்பில்லை. அதாவது யாரெல்லாம் நாம் பார்க்கும் இணையபக்கத்தை பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழியில்லை.
ஹூ ஈஸ் லைவ் சேவை இதை தான் சாத்தியமாக்குகிறது. பிரவுசர்களுக்கான விரிவாக்கமாக உருவாக்க‌ப்பட்டுள்ள இந்த சேவை இணையவாசிகள் பார்த்து கொண்டிருக்கும் அதே இணையதளத்தை வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை காண்பிக்கிற‌து.
ஒத்த கருத்துள்ளவர்கள் பேசி மகிழ‌ பல விஷயங்கள் இருக்கும் அல்லவா? அதே போல் ஒரே தளத்தை பார்ப்பவர்களின் ஆர்வமும் ஒத்து போக‌லாம். என‌வே அந்த தளத்தில் உள்ள மற்ற இணையவாசிகளோடு கருத்துக்களை பரிமாறி கொண்டு இணைய அர‌ட்டையில் ஈடுபடலாம். இணைய‌தளத்தை பார்த்து கொண்டே அரட்டை அடிக்கலாம்.
இணையதளத்தின் உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். பார்த்து கொண்டிருப்பது இகாமர்ஸ் தளம் என்றால் குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு முன் அபிப்ராயம் கேட்கலாம். இந்த பகிர்வு மூலமே புதிய இணைய நண்பர்கள் கிடைக்க‌லாம்.
பேஸ்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.
இணைய‌ அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும். இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் ஒன்று இந்த சேவையில் உறுப்பினராக இருக்கும் இணையவாசிளை மட்டுமே பார்க்க முடியும். பயர்பொக்ஸ், குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிற‌து.

புத்தகங்களை எளிதாக தரவிறக்கம் செய்வதற்கு



புதிதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்றால் இணையத்தில் சென்று தேடும் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி நாம் தேடும் புத்தகத்தை நொடியில் தேடி தருகிறது ஒரு இணையம்.
கூகுள் தேடிக் கொடுக்காத தகவலே இல்லை என்றாலும் அதற்காக நாம் சில மணி நேரங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.
உதாரணமாக நமக்கு ஒரு புத்தகம் வேண்டும் என்றால் கூகுளில் சென்று புத்தகத்தின் பெயரைக் கொடுத்து தேடினால் வரும் முடிவுகளில் பலவற்றை தேடிப் பார்த்தபின் தான் ஏதாவது ஒன்றை தரவிறக்க முடியும். ஆனால் புத்தகங்களை மட்டுமே தேடி கொடுக்க பிரத்யேகமாக ஒரு தேடுபொறி உள்ளது.
இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் கட்டத்திற்குள் எந்த வகையான புத்தகம் தேவையோ அதன் பெயரைக் கொடுத்து Search என்ற பொத்தனை சொடுக்க வேண்டியது தான். வரும் திரையில் உள்ள முடிவுகள் அத்தனையுமே அந்த புத்தகத்திற்கு தொடர்புடைய இணைப்பாக தான் இருக்கும்.
சரியானதை தேர்ந்தெடுத்து சொடுக்கி எளிதாக புத்தகத்தை தரவிறக்கலாம். Doc, Pdf, PPT, XLS போன்ற கோப்புகளையும் தேர்ந்தெடுத்து தேடும் வசதியும் உள்ளது. இணையத்தில் நமக்கு வேண்டிய புத்தகத்தை எளிதாக தரவிறக்க உதவும் இந்தத்தளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்




உங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து உங்கள் இனிமையான குரலினை படங்களுக்கு சேர்த்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது Fotobabble என்ற தளம்.
முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தளத்திலும் ஒரு கணக்கினை திறந்து கொள்ளவும்.
இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தில் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முகபக்கத்தில் இருந்தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்படமும் அதற்கு இணைக்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும். பின்னணியை தெரிவு செய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record என்பதை கிளிக் செய்ததும் பதிவு செய்ய தொடங்கியதும் உங்கள் குரலினை பதிவு செய்துகொண்டு கீழே save என்பதை கிளிக் செய்து சேமித்து கொள்ளவும்.
இப்போது உங்கள் குரல் பதிவு செய்யப்பட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப்பட்ட சமூகவலைத்தள இணைப்புகள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற்றும் வலைத்தளங்களில் பகிர்வதற்கான கோடிங் என்பனவும் தரப்பட்டுள்ளது.

மிகப் பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு


ஒரு பெரிய கோப்புக்களை மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம். கட்டணம் செலுத்தாமல் yahoo, gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
கட்டணம் செலுத்தாமலேயே SendTool என்ற இணையதளத்தின் மூலம் மிகப் பெரிய கோப்புகளை அனுப்பலாம்.
SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் பதிவேற்றம் செய்து விட்டு கிடைக்கும் தரவிறக்க சுட்டிகளை(Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்பினால் போதும். இங்கு கடவுச்சொல் அமைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்


வேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது.
பயோடேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான். அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.
அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
பக்காவான, செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது.
இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.
பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம். துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.
ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான். அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம். இது முதல் படி தான். இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.
பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌
ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.

மரணத்திற்கு பின்னும் உங்களது கடவுச்சொற்களை பாதுகாப்பதற்கு


நாம் பார்க்க போகும் தளம் ஒரு அருமையான ஓன்லைன் சேவையாகும். இந்த தளமானது மிக சிறப்பு வாய்ந்தது என்றே கூறலாம்.
நாம் இந்த தளத்தில் பதிந்து வைக்கும் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காமல் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் நம் மரணம் வரை பாதுகாத்து வைத்து இருக்கும்.
நீங்கள் உங்கள் ஜிமெயிலின் கடவுச்சொல், பேஸ்புக்கின் கடவுச்சொல், டுவிட்டர் கடவுச்சொல் ஆகிய கடவுச்சொற்களை பதிந்து வைத்து விட்டீர்கள்கள் என்றால் உங்கள் மரணத்தின் பின் உங்கள் உறவினரோ அல்லது உங்கள் நண்பரின் மின்னஞ்சல் ஐடி கொடுத்து பதிந்து விட்டால் நீங்கள் இறந்த பின்னும் உங்கள் கணக்கு அவர்களால் திறக்கப்படும்.

அனிமேசனுடன் கூடிய வாழ்த்து அட்டைகளை உருவாக்குவதற்கு


வாழ்த்து செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஓன்லைன் மூலம் நமக்கு தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம்.
நாளுக்கு நாள் வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா வாழ்த்து அட்டை ஓன்லைன் மூலம் எளிதாக சில நிமிடங்களில் உருவாக்கலாம்.
இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிக்கலாம்.
வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள், அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.
விரும்பிய படங்களையும் அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம்.

ஓன்லைனிலேயே இலவசமாக ஸ்கேன் செய்வதற்கு



எத்தனையோ ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் ஒரு குறிப்பிட கால எல்லைக்குள் அதன் காலக்கெடு முடிந்து விடுகிறது.
மீண்டும் ஒரு நல்ல ஆன்டி வைரஸ் மென்பொருள் கிடைக்காதா? என்று மீண்டும் தேடுவோம். சில சமயம் பணம் கொடுத்து வாங்கிய ஆன்டி வைரஸ் மென்பொருளை கூட ஏமாற்றிவிட்டு நம்முடைய கணணியில் புதிய வைரஸ்கள் வந்துவிடக்கூடிய அபாயம் கூட இருக்கிறது.
இந்த பிரச்னைகளை சரி செய்ய ஓன்லைனிலேயே நமது கணணியை ஸ்கேன்(Scan) செய்யலாம்.
சுட்டியை கிளிக் செய்து அங்கு சென்று ஸ்டார்ட் ஸ்கேன்(start scan)கொடுத்து உங்கள் கணணியில் வைரஸ் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

ஓன்லைனிலேயே புகைப்படங்களை எடிட் செய்வதற்கு



 
 
 

புகைப்படங்களை எடிட் செய்வது என்பது பலருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் அனைவராலும் இயலாத ஒரு விடயம்.
புகைப்பட எடிட்டிங் மென்பொருள்கள் பாவிப்பதற்கு கடினமாக இருப்பதால் பலர் விருப்பம் இருந்தும் புகைப்பட எடிட்டிங்கில் இருந்து விலகியே இருக்கிறார்கள்.
இப்படியானவர்களுக்காக இப்போது பல இணையத்தளங்கள் ஓன்லைனிலேயே இலகுவான புகைப்பட எடிட்டிங் அப்ளிகேசன்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
யாரும் இலகுவாக கையாளக்கூடியவாறு பயனர் இடைமுகத்தை கொண்டிருப்பதால் பயன்படுத்துவது இலகு.
அத்துடன் எடிட் செய்த புகைப்படங்களை இங்கிருந்தே சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாத மின்னஞ்சலை உங்கள் பேஸ்புக்கிலிருந்து தடுப்பதற்கு




இன்றைய இணையதள யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க முடியாது. அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது.
முக்கியமானதாக பதிவு செய்து மற்றும் தேவையில்லாத மின்னஞ்சலை எப்படி தவிர்ப்பது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
பேஸ்புக் மூலம் நமக்கு நம்மில் அநேகர் சில பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அவற்றில் மிக முக்கியமானது நம் நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வந்துவிடும், இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும். மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கி Account Settings செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை சொடுக்கவும்.
இப்பொழுது இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequency என்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் மற்றும் நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும். எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம்.
இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம்.

அலுவலகத்திலும் பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு


கல்லூரி மாணவர்கள் கூட நண்பர்களுடன் பேசாமால் இருந்து விட முடியும், ஆனால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களால் பேஸ்புக்கில் நண்பர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்று பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?
அதிலும் வேலையில் மூழ்கி உடலும், மனதும் களைத்து போன நிலையில் ஒரு மாறுதல் வேண்டி மனது அலைபாயும் போது பேஸ்புக்கில் உலாவினால் சுகமாகதானே இருக்கும்.
ஆனால் என்ன செய்வது அலுவலகத்தில் சுதந்திரமாக பேஸ்புக்கில் உலாவும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே.
பல‌ நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தையே தடை செய்திருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் நடுவில் சிறிது நேரம் பேஸ்புக் பார்த்தாலும் யாராவது மேலதிகாரி எட்டிப்பார்த்துவிட்டால் தவறாக நினைத்து கொள்வாரே என்ற சந்தேகமும் காட்டலாம்.
இத்தகைய அனுபவம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்திலும் அச்சமோ சந்தேகமோ இல்லாமால் பேஸ்புக் பதிவுகளை பார்ப்பதற்கான வழியை ஹார்ட்லி வொர்க் இன் தளம் உண்டாக்கி தருகிறது.
இந்த தளம் பேஸ்புக் பதிவுகளை ஏதோ மிக முக்கியமான புள்ளி விவரங்கள் அடங்கிய எக்செல் கோப்புகளை பார்த்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்த தந்து பேஸ்புக்கில் உலாவ வழி செய்கிறது.
கொஞ்சம் பழைய உத்தி தான் இது. படிக்கிற காலத்தில் பாட புத்தகத்தின் நடுவே கதை புத்தகத்தை மறைத்து வைத்து கொண்டு பாட புத்தகம் படிப்பது போல கதை புத்தகம் படிப்பது உண்டல்லவா?
அதே போல தான் இந்த தளம் பேஸ்புக் பதிவுகளை உருவி எக்செல் கோப்பு போல கட்டம் கட்டி தருகிற‌து. யாராவது உங்கள் முதுக்குக்கு பின் இருந்து எட்டிப்பார்த்தால் நீங்கள் எக்செல் கோப்பில் மூழ்கியிருப்பது போல தோன்றும். நீங்கள் ஜாலியாக நண்பர்கள் பதிவுகளை படித்து கொண்டிருக்கலாம்.
முதல் முறை பார்க்கும் போது உங்களுக்கே கூட கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கும். பேஸ்புக்கின் வழக்கமான பதிவு வரிசை அதன் நடுவே புகைப்படங்கள் வீடியோக்கள் என்னும் அழகிய தோற்றத்துக்கு பதிலாக கட்டம் கட்டமாக‌ தக‌வல்களை பார்க்கும் போது குழ‌ம்பிவிடும். ஆனால் கட்டதின் உள்ளே உற்றுபார்த்தால் பதிவுகளையும் புகைப்படங்களையும் இணைப்புகளையும் கருத்துக்களையும் தனித்தனியே படிக்க முடியும்.

உங்களது புகைப்படங்களை பழங்கால படங்களாக மாற்றுவதற்கு


கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்தது தான் இலேசான இளம் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த புகைப்படங்கள்.
அந்த காலத்து புகைப்படங்கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லும். நாம் இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்றலாம்.
தொழில்நுட்ப மாற்றங்கள் நாளும் பெருகி வரும் வேலையில் ஓன்லைன் மூலம் சில நொடிகளில் பல வித்தைகள் செய்யலாம். அந்த வகையில் எந்த மென்பொருள் துணையும் இன்றி ஓன்லைன் மூலம் நம் புகைப்படங்களை பழையாகாலத்தில் எடுத்த புகைப்படம் போல் மாற்றலாம் நமக்கு உதவ ஒரு தளம் இருக்கிறது.
இத்தளத்திற்கு சென்றவுடன் Choose File என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்பதை சொடுக்கி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்த புகைப்படம் பழைய காலத்து புகைப்படமாக மாற்றப்பட்டிருக்கும்.
மாற்றப்பட்ட இந்த புகைப்படதின் மேல் Right Click செய்து Save image as என்பதை சொடுக்கி நம் கணணியில் சேமித்தும் வைக்கலாம்.

இணையத்தில் தகவல்களை இலவசமாக சேமித்து வைப்பதற்கு


இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.
கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தனியாக கோப்பறை அமைத்து வகைப்படுத்தி பதிவேற்றலாம்.
ஓடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம். எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும் கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை எடுக்கலாம்.
ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஓன்லைனில் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Text Animation-ஐ உருவாக்கும் பயனுள்ள இணையம்




எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளிதாக Animation உருவாக்கலாம்.
இத்தளத்திற்கு சென்றவுடன் Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும்.
Font type, Font size, Background color, Direction(new), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும்.
நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணணியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.

பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு




நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.
இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.
சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.
முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run�> சென்று அங்கே �cmd� என டைப் செய்யுங்கள்.
பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.
மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).
இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களது  பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்.

ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை வழங்கும் இணையம்

ஒரு சில வரிகளில் வாழ்க்கையின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது பொன்மொழிகள் தான்.
பல அறிஞர்கள் அவர்களின் அனுபவத்தினாலும், அறிவுத்திறமையாலும் சில பொன்மொழிகளை இந்த உலகுக்கு அளித்து இருப்பார்கள்.
நாம் ஏதேனும் சங்கடத்தில் இருக்கும் பொழுதோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதோ ஒரு சில பொன்மொழிகளை கேட்டால் நம் மனதிற்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும்.
கூகுள் சிறந்த தேடியந்திரமாக இருந்தாலும் அந்த மொன்மொழிகளை மட்டும் தனியே பிரித்து தேடுவது சிரமம். அந்த சிரமத்தை போக்க வந்துள்ளது ஒரு புதிய தேடியந்திரம்.
இந்த தேடியந்திரத்தில் சென்று அறிஞர் பெயரையோ, சரியான keyword கொடுத்தால் போதும் Enter கூட அழுத்த வேண்டியதில்லை அறிஞர்களின் பொன்மொழிகள் மட்டும் உங்களுக்கு தனியே பிரித்து காட்டும்.
இந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்ட வார்த்தை கொடுத்து தேடினால் போதும் உங்களுக்கு அடுத்த நொடியில் பொன்மொழிகள் வந்துவிடும்.
ஒவ்வொரு பொன்மொழிக்கு அருகிலும் அந்த பொன்மொழியை சொன்ன அறிஞரின் பெயரும் இருக்கும். இது போன்று ஆயிரக்கணக்கான அறிஞரின் பொன்மொழிகளை இந்த தேடியந்திரம் நமக்கு தருகிறது.

இலகுவாக மென்பொருளின் Activation Keyகளை பெறுவதற்கு



இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது.
சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது, காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள்.
இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது.
1. முதலாவதாக கூகுள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com
2. பின்னர் கூகுள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
3. அதன் பிறகு கூகுள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.
அதில் எது வேண்டுமோ தெரிவு செய்து உங்கள் மென்பொருளை ஆக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Face Book இன் திரையில் உள்ள போட்டோக்களை ZOOM செய்து பார்க்க.!



Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.

ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது. இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். 

கீழே உள்ளது போன்று இனிமேல் படங்களை பெரிதாக்கிப் பார்க்கலாம்.

இதற்கான கூகிள் குறோமின் நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்

சுட்டி

FireFox நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

சுட்டி 

facebook வழியே கடந்த கால நினைவுகள்!




பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவ‌ரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா?
அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் க‌டந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது.

அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.

வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் கடந்த கால நிகழ்வுகளை தொகுத்தளிக்கின்றன‌ இல்லையா,அதே போல உங்கள் வாழ்க்கையிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை திரும்பி பார்க்க நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த தளம்.

கடந்த ஆண்டு இதே நாளின் என்ன செய்தீர்கள் என்று நினைவில் உள்ளதா என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலை சுவாரஸ்யமான வழியில் முன்வைக்கிற‌து இந்த தளம்.

பேஸ்புக் பயனாளிகள் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும் செயல்களையும் பேஸ்புக் சுவர் வழி செய்திகளாக பகிர்ந்து கொள்கின்றனர் அல்லவா?இவற்றை ஒருவரது வாழ்க்கை பதிவின் கல்வெட்டுக்களாக கருதி தினம் ஒரு செய்தியாக இமெயில் மூலம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.
இந்த தளத்தில் உறுப்பினரான பின் ஒருவரது பேஸ்புக் சுவர் பதிவுகளில் இருந்து கடத்த கால பதிவுகளில் இருந்து கடந்த ஆண்டு அதே நாளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் தேர்வு செய்து இமெயில் மூலம் அனுப்படுகிற‌து.

பேஸ்புக்கில் எல்லோரும் பகிர்ந்து கொள்கின்ற‌னரே தவிர அந்த பதிவுகளை பலரும் திரும்பி பார்ப்பதில்லை.அந்த வசதியை தான் புதுமையான முறையில் இந்த தளம் வழங்குகிறது.

இந்த தளம் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் என்ன செய்து கொண்டிருந்தோம் என அறிந்து கொள்ள முடிவது பயனாளிகளுக்கு புதிய அனுபவமாகவே இருக்கும்.டைரியை புரட்டி பார்ப்பது போல பேஸ்புக் வழியே தங்கள் வாழ்க்கை பிளேஷ்பேக்கில் மூழ்கலாம்.

பேஸ்புக் அனுபவத்தை மேலும் பட்டை தீட்டும் வகையில் பேஸ்புக் சார்ந்து பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானதாக இதனை கருதலாம்.

இணையதள முகவரி

facebook இன் பக்கத்தை இப்போது நீங்களே வடிவமைக்கலாம்.




FACEBOOK என்பது இப்பொழுது ஒரு மிக பெரிய சமுக தளமாக மாறிவிட்டது இப்பொழுது இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது .

இப்போதைக்கு இதனை 500 மில்லியனுக்கும்மேற்ப்பட்ட பயனர்கள் உபயோக படுத்துகின்றனர். நாம் அனைவரும் FACEBOOK கை பயன்படுத்துகிறோம் அதை பற்றி நன்கு அறிந்துள்ளோம் . அதன் தோற்றம் ஒரே மாதிரி தான் இருக்கிறது இப்பொழுது தான் அதற்க்கு அந்த நிறுவனம் profile themes சை அறிமுகபடுத்தி இருக்கிறது.

அதன் மூலம்    FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம் .ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது மேலும் அவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது.

அதனால் நீங்கள் விரும்பும் வண்ணம் நீங்களே உங்களுக்குரிய தீம்களை வடிவமைப்பதாக இருந்தால் எப்படி இருக்கும் ?

ஆமாம் இதோ அதற்க்கான சுட்டி 
மேலே உள்ள தளத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களுக்கான தீம்ஸை வடிவமைக்கலாம்.மேலும் அதில் உள்ள தீம்சையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதை முதலில் நீங்கள் அதற்குரிய மென்பொருளை அந்த தளத்தில் இருந்து  பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் FACEBOOK கணக்கில் நுழைந்து மாற்றத்தை பாருங்கள்.

Facebook Chat ஐ கணினி Desktop இல் கொண்டு வர…




பேஸ்புக் இணையத்தளம் பல வசதிகளை தனது பாவனையாளர்களுக்கு உருவாக்கி தந்தாலும் பேஸ்புக் சாட்டிங்கில் ஆன்லைனில் இருக்கும் நண்பர்கள் மற்றும் ஏனையோரும் ஒரே வரிசையில் தெரிவதால் அதைக் கையாள்வதில் சிலர் சிரமங்களை எதிர்நோக்கலாம். இவற்றைத் தவிர்த்து இலகுவான வடிவமைப்புடன் பேஸ்புக் சாட்டிங்கை உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் கொண்டுவர உதவும் desktop client  fTalk  ஆகும்.
இதனை தரவிறக்கு நிறுவிக்கொண்ட பின்னர் பேஸ்புக் கணக்கின் யூசர் பெயர் கடவுச்சொல் பயன்படுத்தி உள்நுழையுங்கள்.
authorization  செய்ததும் பழைய MSN வடிவில் fTalk இயங்கக் தொடங்குகிறது.
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் நண்பர்களை தனித் தனியாக பிரித்துக் காட்டுகின்றமை இலகுவான பாவனைக்கு உதவுகிறது.
மேலும் பல விருப்பத் தேர்வுகளையும் கொண்டிருக்கிறது.
தரவிறக்கம் செய்ய இணைப்பு - http://www.ftalk.com/

Facebook இல் Game Requests வருவதை நிறுத்துவது எப்படி?




பேஸ்புக்கில் ஒரு சில விளையாட்டுக்கள் இருக்கிறது எப்படி என்றால் நண்பர்களுக்கு அந்த விளையாட்டை பரிந்துரை செய்து அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவருக்கு அந்த விளையாட்டில் பொயின்ஸ் கிடைத்து அடுத்த லெவலுக்கு போய்விடுவர்..அப்படியான விளையாட்டை ஒரு முறை பரிந்துரை செய்தால்  கண்டும் காணாமலும் விடலாம். தொடர்ந்து வேண்டும் என்றே Requests அனுப்பினால்...
பேஸ்புக்கில் உள்நுழைந்துவிட்டு இடது பக்கம் இருக்கு  சைட் வாரில்  "Game Requests" 

குறித்த நபர் அனுப்பிய requests இற்கு நேரே இருக்கும்  X என்பதை க்ளிக்செய்து

 Ignore all requests என்பதை கொடுங்கள்



இனிமேல் அவரிடம் இருந்து எந்த  request உம் வராது..

flash drive ஐ கழற்ற மறந்து shutdown கொடுப்பவர்களுக்கு உதவும் மென்பொருள்!!




உங்கள் flash drive ஐ கழற்ற மறந்து அவசரத்தில் shutdown கொடுப்பவர்கள் பல சமயங்களில் கணினியிலேயே flash drive ஐ கழற்றாமல் விட்டு விடுவார்கள். இதனால் அவர்களது flash drive ஐ யாரும் திருடவோ அல்லது அதில் உள்ள பைல்களை திருடவோ வாய்ப்புக்கள் அதிகம்.

எனவே இவ்வாறான மறதியுள்ளவர்களுக்கு உதவும் மென்பொருள் ஒன்றை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.



இதனை நிறுவினால் flash drive ஐ கழற்ற மறந்து அவசரத்தில் shutdown கொடுக்கும்போது எச்சரிக்கும்.

எனவே உடனே கழற்றிவிட்டு தொடர்ந்து shutdown கட்டளையை வழங்கலாம்.

இம்மென்பொருள் நிறுவ Windows XP/Vista/7 (32-Bit/64-Bit) இவற்றுள் ஏதாவது ஒரு இயங்கு தளமும் Microsoft .NET Framework 2.0. உம் அவசியம்.92.8KB அளவுடையது.

தரவிறக்க இங்கே செல்லவும்.

உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க...



நீங்கள் FaceBook கணக்கைத் திறந்து பயன்படுத்தும்போது உங்கள் பக்கத்திலே பல விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வாறான விளம்பரங்கள் சிலருக்கு உபயோகமாயிருப்பினும் எம்மில் பலருக்கு இடையூறாகவோ  காணவும்படலாம்.

எனவே இவ்வாறான விளம்பரங்களை எமது FaceBook பக்கத்திலிருந்து நீக்கினால் எப்படியிருக்குமென்றஎண்ணமும் பலருக்குத் தோன்றலாம். அதற்கு தீர்வாக இப்பதிவு அமையமென எதிர்பார்க்கின்றேன்.




இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான். கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி குறித்த செயலியை கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

இங்கே சொடுக்கவும்


இப்போ உங்கள் FaceBook பக்கத்தினை பார்த்தீர்களானால் விளம்பரங்கள் நீக்கப்பட்டுக் காணப்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்.....

தொல்லை தரும் கொசுக்களை விரட்ட பயனுள்ள புதிய மென்பொருள்!!




இந்த கொசுக்களை விரட்ட நாம் தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம். பலர் டென்னிஸ் மட்டைப்போல் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு கொசுக்களை அடிப்பதை பார்த்திருப்போம். 

நாம் கணினியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த மென்பொருள் உதவுகிறது.இதை பதிவிறக்கி ஓபன் செய்தவுடன் நேரடியாக அல்ட்ரா ஒலிகளை வெளிப்படுத்த ஆரம்பித்துவிடும். இந்த ஒலிகள் மனித காதுகளுக்கு கேட்காது.

தொல்லை தரும் கொசுக்களை விரட்ட பயனுள்ள புதிய மென்பொருள்!!

இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.

இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும்.இது போன்ற மென்பொருள் இணையத்தில் பல இருந்தாலும் உடனே பயனளிக்க  கூடிய மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.

இதில் எந்த நச்சுநிரலும் கிடையாது.மற்றும் மிக சிறியதும் கூட..


FACE BOOK வைத்திருப்போருக்கு மிகவும் பெறுமதியான மென்பொருள்!



Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.

ஆனால் அப்படிச் செய்யாமல் அதே பக்கத்தில் வைத்தே பெரிதாக்கிப் பார்க்கலாம். இதற்காக ஒரு நீட்சி ஒன்று உள்ளது. இதனை நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொண்டால் போதும். கீழே உள்ளது போன்று இனிமேல் படங்களை பெரிதாக்கிப் பார்க்கலாம்.




இதற்கான கூகிள் குறோமின் நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.




FireFox நீட்சியைப் பெற கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

ஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள் அறிமுகம் (அதிர்ச்சி வீடியோ)




தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக நிர்வாணம்காட்டும் ஜபோன் இப்போது பெரிதும் மக்கள் பாவனையில்.

இந்த ஜபோன் மூலம் பெண்களும் சரி ஆண்களும் சரி இவர்கள் ஆடை அணிந்து வந்தாலும் இந்த மென்பொருள் ஆடையை நீக்கிகாட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள் அறிமுகம்



ஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள் அறிமுகம்

ஐ.போன் 4s அறவே கூடாதாம் இந்தக்கூத்த பாருங்கோவன்! (வீடியோ இணைப்பு)



ஐ.போனின் புதிய பதிப்பு வெளிவந்த விடயம் யாவரும் அறிந்ததே…புதிய ஐபோன் 4s ஐயும் சம்சுங் கேலக்ஸ்சி போனையும் ஒரு கும்பல் பரிசோதனை செய்து காட்டுகிறது.

இதில் எந்த போன் சிறந்த போன் என்பதற்காக ஒவ்வொன்றும் மேலிருந்து கீழ் நோக்கி 3 தடவைகள் வீழ்த்தப்படுகிறது. இதில் ஐ.போன் 4s சுக்கு நூறாக உடைந்துவிட சம்சுங் கேலக்ஸ்சி நொறுங்காமல் புதிதாகவே இருக்கிறது? இது உண்மையா? அல்லது விளம்பரமா? பார்ப்பதற்கு விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டதாகவே இருக்கிறது.

நாம் இதன் உண்மைத்தன்மை பற்றி 100 வீதம் உணர்ந்து கொள்ள வேண்டுமாயின் இதே செய்முறையை நாம் செய்தால்தான் உண்டு.


கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S (வீடியோ இணைப்பு)



ஆப்பிளின் ஐபோன் 4S வெளியாகி விற்பனையில் சக்கை போடு போடுகிறது.SIRI எனும் சூப்பர் தொழில்நுட்பத்தின் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிக திறமையாக பதலளிக்கிறது ஐபோன் 4S.

அலாம் செட் செய்தல் , காலநிலை அவதானிப்பு போன்ற என்னும் பலவற்றை குரல் வழியாகவே நிறைவேற்றலாம்.

மக்கள் தொகை என்ன? அருகில் இருக்கும் உணவகம் எது? புளூட்டோ கிரகம் எவ்வளவு தூரத்தில்? என்ற கேள்விகளுக்கு உடனேயே பதிலைத் தேடி வழங்குகிறது.

ஐபோனை வாங்கியதும் டெமோ காட்டுவதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என பலரும் ஐபோனிடம் என்னவெல்லாம் கேட்க முடியுமோ கேட்டு யூடீயூப்பில் வெளியிடுகிறார்கள்.

உனது தந்தை யார் என்று கேட்கும் கேள்விக்கு, அது நீர்தான் நாங்கள் வேலையை பார்ப்போமா என பதிலளித்து அசத்துகிறது SIRI.


கைத்தொலைபேசிக்கான Opera Mini மென்பொருளின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது!!




நாளுக்கு நாள் கைத்தொலைபேசிகளில் வசதிவாய்ப்புக்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஆரம்பத்தில் அழைப்புக்களை மேற்கொள்வதற்காகவே தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டன. காலப்போக்கில் SMS, MMS என ஒவ்வொரு வசதிகளும் உள்ளடக்கப்பட்டு இப்போது ஒரு கைத்தொலைபேசி கணினி ஒன்றிற்கு நிகராக சகல வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

அந்த வகையில் இப்போது கைத்தொலைபேசியில் இணையப்பாவனை முக்கியத்துவம் பெற்று வருகிறது. கைத்தொலைபேசியுடன் வரும் இணைய உலாவிகளின் வேகம் குறைவாகவே காணப்படும்.

இந்த குறையை போக்கும்முகமாக பல நிறுவங்களும் பல்வேறு இணைய உலாவிகளை கைத்தொலைபேசிகளிக்காக வெளியிட்டு வருகின்றன.

அவற்றில் சிறந்த உலாவியாக Opera Mini முன்னிலையில் இருக்கிறது. இப்போது அதன் புதிய பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிவேக இணைய உலாவி, தரவிறக்கத்திற்கு தனியான பகுதி என பல புதிய வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளை தரவிறக்க இந்த தளம் செல்லுங்கள் Opera Mini 6.1

பேஸ்புக்கில் போலியான Wall Message உருவாக்குவதற்கு.




இணையத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பினால் நீங்கள் இணையத்தை புதிதாக பயன்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது இணைய ஏமாற்றுதல்களை பற்றி அறியாமல் இருந்திருக்க வேண்டும்.

இணையத்தில் மோசடிக்காகவும், நண்பர்களுக்குள் விளையாடி கொள்ளவும் இது போன்ற புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் நாம் நண்பர்களுடன் விளையாடி கொள்ளும்படி இணையத்தில் நண்பர்கள் குமிழும் ஒரு இடமாக பேஸ்புக் தளத்தில் போலியான பேஸ்புக் the Wall Message உருவாக்கலாம்.

இதற்கு ஒரு இணையதளம் உள்ளது. முதலில் இந்த the wall machine லிங்கில் சென்று அந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

அதிலுள்ள f Connect என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Allow பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

அந்த விண்டோவில் உங்களுக்கு தேவையான படி அதை எடிட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான புகைப்படத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

புகைப்படத்தை தேர்வு செய்யும் பொழுது கூகுள் மூலம் தேடி பெரும் வசதியும், உங்களின் பேஸ்புக் நண்பர்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் கொடுத்து இருக்கிறார்கள்.

GMAIL Password ஐ களவெடுக்க வேண்டுமா?


GMAIL Password ஐ களவெடுக்க வேண்டுமா?


ஹக்கிங்கும் கற்று மறக்கவேண்டிய பாடம்தான். இப்பதிவு இப்படியும் உங்கள் தகவல்கள் திருட்டுப்போகலாம் என்று உணர்த்தவே.

நம்மில் பெரும்பாலானவர்கள் பொது இடங்களில்(Internet cafes,பாடசாலை) இணையத்தை பயன்படுத்துகிறோம். மின்னஞ்சலையும் பயன்படுத்துகிறோம். அவ்வாறு குறித்த கணணியில் ஒருமுறையேனும் பயன்படுத்திய ஜிமெயில் கணக்குகளின் தகவல்களை இலகுவாக திருடமுடியும். (உலவிகளில் சேமிக்கப்படும் பாஸ்வேர்ட்டை சொல்லவில்லை. உலவிகளில் சேமிக்காத பாஸ்வேர்ட்டையும் திருடமுடியும்)

முதலில் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் சென்று தரப்பட்ட மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

இங்கே சொடுக்கவும்

இப்பொழுது இந்த இணைப்பை பயன்படுத்தி குறித்த மென்பொருளுக்கான Key-generator ஐ தரவிறக்குங்கள்.

இங்கே சொடுக்கவும்

எந்தக்கணணியில் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்டுகளை திருடவேண்டுமோ அந்தக்கணணியில் மென்பொருளை install செய்யுங்கள். (இதற்கு Administrator privilege தேவை)

Install செய்த மென்பொருளை open செய்து ‘Register Now’ button ஐ சொடுக்கி தொடரிலக்கத்தை கொடுத்து Register செய்யவும்.

இனியென்ன “Recover Password” button ஐ சொடுக்குங்கள். அனைத்து பாஸ்வேர்ட்டும் இமெயில் முகவரியுடன் கிடைத்துவிடும்.