Labels

அலுவலகத்திலும் பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு


கல்லூரி மாணவர்கள் கூட நண்பர்களுடன் பேசாமால் இருந்து விட முடியும், ஆனால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களால் பேஸ்புக்கில் நண்பர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்று பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?
அதிலும் வேலையில் மூழ்கி உடலும், மனதும் களைத்து போன நிலையில் ஒரு மாறுதல் வேண்டி மனது அலைபாயும் போது பேஸ்புக்கில் உலாவினால் சுகமாகதானே இருக்கும்.
ஆனால் என்ன செய்வது அலுவலகத்தில் சுதந்திரமாக பேஸ்புக்கில் உலாவும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே.
பல‌ நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தையே தடை செய்திருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் நடுவில் சிறிது நேரம் பேஸ்புக் பார்த்தாலும் யாராவது மேலதிகாரி எட்டிப்பார்த்துவிட்டால் தவறாக நினைத்து கொள்வாரே என்ற சந்தேகமும் காட்டலாம்.
இத்தகைய அனுபவம் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்திலும் அச்சமோ சந்தேகமோ இல்லாமால் பேஸ்புக் பதிவுகளை பார்ப்பதற்கான வழியை ஹார்ட்லி வொர்க் இன் தளம் உண்டாக்கி தருகிறது.
இந்த தளம் பேஸ்புக் பதிவுகளை ஏதோ மிக முக்கியமான புள்ளி விவரங்கள் அடங்கிய எக்செல் கோப்புகளை பார்த்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்த தந்து பேஸ்புக்கில் உலாவ வழி செய்கிறது.
கொஞ்சம் பழைய உத்தி தான் இது. படிக்கிற காலத்தில் பாட புத்தகத்தின் நடுவே கதை புத்தகத்தை மறைத்து வைத்து கொண்டு பாட புத்தகம் படிப்பது போல கதை புத்தகம் படிப்பது உண்டல்லவா?
அதே போல தான் இந்த தளம் பேஸ்புக் பதிவுகளை உருவி எக்செல் கோப்பு போல கட்டம் கட்டி தருகிற‌து. யாராவது உங்கள் முதுக்குக்கு பின் இருந்து எட்டிப்பார்த்தால் நீங்கள் எக்செல் கோப்பில் மூழ்கியிருப்பது போல தோன்றும். நீங்கள் ஜாலியாக நண்பர்கள் பதிவுகளை படித்து கொண்டிருக்கலாம்.
முதல் முறை பார்க்கும் போது உங்களுக்கே கூட கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கும். பேஸ்புக்கின் வழக்கமான பதிவு வரிசை அதன் நடுவே புகைப்படங்கள் வீடியோக்கள் என்னும் அழகிய தோற்றத்துக்கு பதிலாக கட்டம் கட்டமாக‌ தக‌வல்களை பார்க்கும் போது குழ‌ம்பிவிடும். ஆனால் கட்டதின் உள்ளே உற்றுபார்த்தால் பதிவுகளையும் புகைப்படங்களையும் இணைப்புகளையும் கருத்துக்களையும் தனித்தனியே படிக்க முடியும்.

No comments:

Post a Comment