Labels

தேவையில்லாத மின்னஞ்சலை உங்கள் பேஸ்புக்கிலிருந்து தடுப்பதற்கு




இன்றைய இணையதள யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க முடியாது. அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது.
முக்கியமானதாக பதிவு செய்து மற்றும் தேவையில்லாத மின்னஞ்சலை எப்படி தவிர்ப்பது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
பேஸ்புக் மூலம் நமக்கு நம்மில் அநேகர் சில பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அவற்றில் மிக முக்கியமானது நம் நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வந்துவிடும், இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.
முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும். மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கி Account Settings செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை சொடுக்கவும்.
இப்பொழுது இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequency என்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் மற்றும் நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும். எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம்.
இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம்.

No comments:

Post a Comment