Labels


என்னவளே

என்னவளே நீ ஏன் 
வந்தாய் என்னுள்ளே
என்னைக் கொண்டாய் 
முழுவதுமாய் உன்னுள்ளே
பெண்ணாய் வந்தென்னை 
கொன்றனயோ... இல்லை 
பொன்னாய் என்னுள்ளே
ஒளிர்ந்தனயோ ..
விண்ணாய் விரிந்த
அன்பினுக்குள் நுழைந்ததனால்
மண்ணில் சொரிந்த மழை
நீராய்க்கலந்தனையோ..
என்னுள் புகுந்து நீ
உன்னை இழந்தனையோ... இல்லை
உன்னுள்ளே வருவதற்காய்
என்னையே நான் தொலைத்தனையோ
இழப்புக்கள் கூட
இன்பமாய் இனிப்பதுவும்
இதயங்கள் இரண்டும்
இடம் மாறித் துடிப்பதுவும்
காதலில் மட்டுமே
எப்படித்தான் சாத்தியமோ?

No comments:

Post a Comment