Labels

போட்டோஸ்கேப் (photo scape software)



பழைய திரைப்பட பாடலொன்று. ஒன்றா - இரண்டா எடுத்து சொல்ல....என ஆரம்பிக்கும். அதைப்போல இந்த சின்ன - இலவச -சாப்ட்வேரில் உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் பயன்கள் இதில் உள்ளது.போட்டோஷாப்பில் நாம் செய்கின்ற அனைத்துவேலைகளையும் போட்டோஷாப் இல்லாமல் இந்த சாப்ட்வேரில் நாம் செய்துவிடலாம். 17 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதை பதிவிறகக இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதை சுற்றி உள்ள எண்ணற்ற வசதிகளில் எதை கிளிக் செய்கின்றமோ அந்த வசதியை நாம் சுலபமாக பெறலாம்.முதலில உள்ள Viewer . நமது கணிணியில் உள்ள புகைப்படத்தின் போல்டரை தேர்வு செய்ததும் அனைத்து படங்களும் இங்கு தம்ப்நெயில் வியுவில் நமக்கு கிடைக்கும். இதிலிருந்து  Slideshow, Fullscreen, Wallpaper, Lossless Rotation, Exif போன்ற  வசதிகளை நேரடியாக பெறலாம். 
அதற்கு அடுத்துள்ளது Editor. இதை கிளிக் செய்வதன் மூலம் நாம்  Frames, Resize, Rotate, Brightness, Color, Contrast, Auto Level, Auto Contrast, Whitebalance, Curves, Sepia, Negative, Sharpen, Blur, Noise Reduction, Vignetting, Bloom, Gradient, Texture, Fisheye, Clipart, Balloon, Text, Figures, Crop, Red Eye Removal, Mosaic, Paint Brush, Clone Stamp போன்ற வசதிகளை பெறலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

படத்திற்கு வண்ண வண்ண பார்டர்கள் முதற்கொண்டு அனைத்து வித ப்ரெம் ஒர்க்குகளும் இதில் செய்யலாம். வேண்டிய அளவிற்கு கட் செய்து கொள்ளலாம்


.
இதில் அடுத்துள்ள Batch Editor கிளிக் செய்வதன் மூலம் Frames, Resize, Filters, Objects போன்ற பணிகளை செய்யலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
திருமண் ஆல்பம் முதற்கொண்டு பிறநதநாள் ஆல்பம் வரை நாம் ஒரே பக்கத்தில் பல புகைப்படங்கள் கொண்டுவருவோம். இந்த சாப்ட்வேரில் அதைப்போல நாம் விரும்பிய புகைப்படங்களை வேண்டிய வடிவங்களில் கொண்டுவரலாம். புகைப்படத்தை தேர்வு செய்துகொண்டு அதை இழுத்துவந்து வேண்டிய கட்டத்தில் விட வேண்டியதுதான். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதைப்போல பல போட்டோக்கள் இருக்கும் அதை நீள வாக்கிலோ அகலவாக்கிலோ ஒன்றாக சேர்க்கலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.



புகைப்படங்கள் வைத்து அனிமேஷன் செய்வது பற்றி பார்த்தோம். இதிலும் சுலபமாக அனிமேஷனை செய்யலாம். அனிமேஷனிலேயே 10க்கும் மேற்பட்ட Effect -விளைவுகளை கொண்டுவரலாம்.அடுத்து
நாம் டிசைன் செய்த புகைப்படத்தை பிரிண்ட் செய்வதற்கு என்று இதில தனியாக வசதி உள்ளது. அதைப்போல வேண்டிய அளவில் வேண்டிய வடிவங்களில் இதில சுலபமாக பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.


ஸ்கிரின் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது. வேண்டிய வடிவத்தில் எடுத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.

படங்களை வேண்டிய அளவில் துண்டுதுண்டு படங்களாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது.அதைப்போல சாதாரண பேப்பரில் வேண்டிய அளவிறகு  Print lined, graph, music, calendar papers( கோடுபோடும் வசதியும் - இசை குறிப்பு -காலண்டர்)எழுதும் பேப்பரை கொண்டுவரும் வசதியும் இதில் உள்ளது.

இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து ஒவ்வோரு வசதியையும் பயன்படுத்தி்ப்பாருங்கள்
 Download As PDF  

No comments:

Post a Comment