Labels

இணைய இணைப்பில்லாதபோது ஜி-மெயிலில் ரெடிமேட் தகவல் அனுப்ப




நாம் எப்போதும்இணைய இணைப்பிலேயே இருப்போம்
என சொல்ல முடியாது. அவசர வேலையாக வெளியில்
செல்ல நேரிடலாம். இரண்டு நாள் - மூன்று நாள் வெளியூர்
செல்ல நேரிடலாம். அதுபோல் சமயங்களில் நமக்கு
வரும் இ-மெயில் கடிதங்களுக்கு ரெடிமேட் பதில்களை
அனுப்புமாறு ஜி-மெயிலில் செட் செய்திடலாம்.

இந்த செட்டிங்கை நாம் செய்துவிட்டவுடன் மற்றவர்கள்
நமக்கு மெயில் அனுப்பினால் அவர்களுக்கு நாம்
ரெடிசெய்து வைத்துள்ள தகவல் உடனே சென்று சேரும்.

நாம் நமது மெயிலை ஓப்பன் செய்து பார்க்கும் வரையில்
-ஒருவரே நமக்கு தொடர்ந்து அதே மெயில் முகவரியில்
மெயில் அனுப்பிகொண்டிருந்தால் முதலில் நாம்
தயார் செய்த பதில் சென்று சேரும். அடுத்த ரெடிமேட்
பதில் மீண்டும் நான்கு நாட்களுக்கு பிறகே சென்று சேரும்.
அதே நபர் வேறு மெயில் முகவரியில் மெயில் அனுப்பினால்
அவருக்கு ரெடிமேட் பதில் சென்று சேரும். இந்த செட்டிங்
எல்லாம் நாம் மெயில் திறந்து பார்க்கும் வரைதான்.
மீண்டும் நாம் மெயில் விட்டு வெளியேறுகையில் விருப்ப
பட்டால் செட்டிங்கை சேவ் செய்துவிட்டு செல்லாம்.

சரி இதை எப்படி செட் செய்வது. உங்கள் ஜி-மெயில்
திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள செட்டிங்ஸ்
கிளிக் செய்து வரும் விண்டோவில் General கிளிக்
செய்யுங்கள். அதில் கீழ் உள்ள இந்த விண்டோவை
பாருங்கள். இதில் Out of Office AutoReply on எதிரில் உள்ள
ரேடியோ பட்டனை தேர்வு செய்து இதில் உள்ள
Subject மற்றும் Message -ல் விரும்பிய வார்த்தைகளை
தட்டச்சு செய்து இறுதியில் Save Changes கிளிக் செய்து
வெளியேறுங்கள்.


Out of Office AutoReply:
(sends an automated reply to incoming messages. If a contact sends you several messages, this automated reply will be sent at most once every 4 days)
Learn more
Subject:
Message:

நான் தமிழில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்துள்ளேன்.





ஆங்கிலத்தில் தட்டச்சு செய்த விவரம் கீழே:-


Sir/Madam,

Thank you for writing to me

This is a computer generated acknowledgement of your email.

We would revert to you at the earliest.


Regards,
Ragul
 Download As PDF  

No comments:

Post a Comment