Labels

மைக்ரோசாப்ட் வைரஸ் சேஃப்டி ஸ்கேனர்




மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே Microsoft Security Essentials என்னும் ஆண்டி வைரஸ் மென்பொருளை தந்துள்ளது. இது மற்ற ஆண்டி வைரஸ் மென்பொருள்களை போலவே உங்கள் கணிணியில் நிறுவி இயக்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனமே தந்தாலும் பலர் பிற இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களையே நிறுவி பயன்படுத்துகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் மற்றொரு ஆண்டி வைரஸ் மென்பொருள் Microsoft Safety Scanner. இந்த மென்பொருளை நீங்கள் நிறுவ தேவை இல்லை, டவுன்லோட் செய்து அப்படியே கிளிக் செய்து இயக்க கூடிய போர்டபில்(Portable) மென்பொருள். உங்கள் கணிணியில் ஆண்டி வைரஸ் இருந்தும் வைரஸ் வந்தாலோ அல்லது இருக்கலாம் என நீங்கள் நினைத்தாலோ இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணிணியை ஸ்கேன் செய்து வைரசை நீக்கலாம்.

இந்த மென்பொருள் 70MB அளவு கொண்டது. தற்போது வரை உள்ள அறியப்பட்ட அனைத்து வைரஸ் பற்றிய விபரங்களையும், அதை நீக்கவும் செய்கிறது. இதை நிறுவிய பின் தோன்றும் திரையில் என்னமுறையில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்தாலே போதும் , ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கி விடும்.




ஆனால் இந்த மென்பொருளில் உள்ள குறை என்னவென்றால் நீங்கள் இதனை அப்டேட் (update)செய்ய இயலாது.மேலும் இதனை டவுன்லோட் செய்த 10 நாட்களுக்கு மேல் இயங்காது.மீண்டும் ஒருமுறை அண்மைய வைரஸ் பற்றிய விபரங்கள் கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். அதாவது மீண்டும் 70mb கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

ஆனால் இதனால் என்ன பயன் என்றால் உங்கள் கணிணியில் எதிர்பாராத விதமாக வைரஸ் தாக்கி உங்கள் ஆண்டி வைரஸ் இயங்காமல் போனாலோ, இந்த மென்பொருளை உடனே டவுன்லோட் செய்து இயக்கி வைரஸ்களை நீக்கலாம். இது போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் வைரஸ் எளிதில் தாக்காது. இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

Download Microsoft Safety Scanner
 Download As PDF  

No comments:

Post a Comment